தமிழக அரசு தற்போது நாய்கள் வளர்த்தல் தொடர்பான ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த 11 வகையான நோய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்ற‌உத்தரவிட்ட நிலையில் அதன் அடிப்படையில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாய்கள் இனப்பெருக்கம், வணிகம் மற்றும் விற்பனை மூலம் மிகப்பெரிய தொழில் நடைபெறுவதால் இதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். மரபுசாரா பிரச்சனைகள் மூலம் குறைபாடுள்ள நாய்க்குட்டிகள் வளர வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் கட்டுப்பாடாக இனப்பெருக்கம் மனித சமூகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே வெளிநாட்டு வகைகளை சேர்ந்த 11 வகையான நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது. அதேபோன்று நாய்களுக்கான உரிமம் பெறுதல் போன்றவைகளுக்கான கொள்கைகளும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெறுவது அவசியம். இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். நாய்களின் வாலை வெட்டுதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுல் போன்றவற்றை செய்யக்கூடாது. மேலும் நாயின்  தோற்றத்தை செயற்கையாக மாற்றக்கூடாது போன்ற பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.