
பொதுவாக நம்மில் பலர் கண்ணில் பட்டதும் வாயில் எச்சில் ஊரும் உணவு பொருட்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று தான் சில்வர் லீப் ஒட்டிய இனிப்பு. இனிப்புகள் மீது ஒட்டப்படும் சில்வர் நிற பேப்பர்கள் இது சுத்தமான சுத்தமான வெள்ளியால் ஆனது. இதில் 2.8 மைக்ரோகிராம் கொண்டது. வெள்ளி அதிக அளவில் உடலுக்குள் போனால் அது சருமத்தில் படிந்து சருமத்தை நீலம் நிறைந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும் என சொல்லப்படுகின்றது.
ஆண்டுதோறும் சுமார் 2,75,000 கிலோ வெள்ளி உலோகம் இனிப்புகள் மீதும் பிரியாணி, பீடா, பழங்கள் போன்ற மற்ற உணவு பொருட்களின் மீதும் ஒட்டப்பட்டு உண்ண படுகின்றது. 275 டன் வெள்ளியை நாம் ஆண்டுதோறும் சாப்பிடுகின்றோம் என்றால் அது பெரிய அளவே ஆகும் என்று சொல்லப்படுகிறது. இப்போது நவீன முறையில் வெள்ளி இதழை தயாரிக்கிறார்கள். மாட்டு குடல் கலாச்சாரம் இப்போது இல்லை. 100% சைவமான முறையில் எந்த ஒரு ரசாயன பொருளையும் சேர்க்காமல் வெள்ளி இதழ்கள் தயாரிக்கப்படுகிறது.
இரும்பு சுத்தியலும் ஜெர்மன் பட்டர் பேப்பரும் தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஹைதராபாத்தை சேர்ந்த வெள்ளி இதழ் உற்பத்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஒருமுறை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் உணவில் இனிப்பு பலகாரங்களில் சோதனை செய்த போது வெள்ளி இதழ்களுக்கு பதிலாக அலுமினிய இதழ்களை இனிப்புகள் மீது ஒட்டி இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அலுமினியம் உடலில் அதிக அளவு சேர்ந்தால் ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகிவிடும்.
அது கால்சியத்தை எழும்பின் மீது பதிய விடாது. அதனால் மூளையில் உள்ள திசுக்களில் அலுமினியம் படிய ஆரம்பித்து அல்சைமர் நோய் போன்றவை வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை கண்டறிய சில்வர் நிற பேப்பரை சிறிது கையில் எடுத்து அதனை உள்ளங்கையில் தேய்த்து பார்க்க வேண்டுமாம். வாட்ஸ் சில்வர் லீப் என்றால் உள்ளங்கையில் அது முற்றிலுமாக துகளாக மாறிவிடும்.
இதுவே அலுமினியம் ஸ்பாய்ல் சீட் என்றால் குட்டி உருண்டையாக வரும் என்று சொல்லப்படுகிறது. அதனை வைத்து நீங்களே சோதனை செய்து கொள்ளலாம். எனவே உண்பதற்கு முன்பு தேவைப்படும் சோதனைகளை முடித்து அதில் எவ்வித கலப்படமும் இல்லை என்பது தெரிந்த பின்பு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறியுள்ளனர்.