நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் விடுமுறை தினத்தில் வாடிக்கையாளர்கள் சற்று சிரமப்படுகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

அதன் பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. இதனையடுத்து செப்டம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம். இதேபோன்று செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை. மேலும் செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை தினம், செப்டம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக வங்கிகளுக்கு இந்த மாதத்தில் மட்டும் 8 நாட்கள் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இது போக சில மாநிலங்களில் அந்தந்த பண்டிகை தினங்களை முன்னிட்டு விடுமுறைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.