செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றரை ஆண்டு திராவிட மாடல்  ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில், மக்களை கொதித்து போய்… வெறுத்துப் போய் இருக்கிறார்கள். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அந்த பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார் என்று தான் நான் பார்க்கிறேன்.

அது மட்டுமல்லாமல் தாங்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு எங்களை பற்றி அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். ஒரு கட்சியில் கூட்டணி வைப்பது விலகுவது அந்த கட்சியை பொறுத்தது. எங்களை பொறுத்தவரை நாங்கள்  பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். ஆகவே விலகி விட்ட காரணத்தினால்,  திராவிட முன்னேற்றக் கழக தலைவர் இன்று பயந்து நடங்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் பேச்சிலிருந்து… அறிக்கையில் இருந்து…  அவர் பேசப்படுவதில் இருந்து நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் சிறுபான்மை மக்களை இதுவரை ஏமாற்றி வந்தார்கள்.   அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம்  வந்திருக்கிறது என்று சொல்லி விமர்சனம் செய்து,  சிறுபான்மை மக்களுக்கு திமுகவும்,  திமுக கூட்டணியில் அங்கம் வைக்கின்ற  கட்சிகளும் ஒரு நன்மை செய்வது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அதற்கு இப்பொழுது நாங்கள் கூட்டணியில் இருந்து விலங்கிய பிறகு,  சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச்  சேர்ந்த என்னையும், தலைமை கழக நிர்வாகிகளையும்  சந்திப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சு வந்து கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.