நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என திமுக எம்பி வில்சன் சென்ற ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்த நிலையில், பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூபாய் 40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் அது 1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.