மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் உள்ளது. தற்போது வர இருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கியமான அறிவிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

வருமானவரி விலக்கு

வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டால் செலவு செய்வதற்கான அதிக ரொக்கத் தொகை மக்களிடம் இருக்கும். இது கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுநுகர்வில் ஏற்பட்ட மந்த நிலையை சரிசெய்ய உதவி நாட்டில் உருவாகிய பொருளாதார மந்தநிலையில் இருந்தும் மீள உதவும்.

சிறு வணிகங்களுக்குரிய குறைந்த விலை கடன்

நடுத்தர மற்றும் சிறு வணிகங்களுக்கு குறைவான விலை கடன் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுக் கடனுக்கு வரிவிலக்கு

இப்போது தனி நபர் ஒருவர் சுயமாக ஆக்கிரமித்து உள்ள சொத்துக்கான வீட்டுக்கடனில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு கோரலாம்.

மாற்று ஆற்றலில் கவனம்

ஆற்றல் மாற்றுக்குரிய வழிகளை உலகம் ஆராய்ந்து வருகிறது. மின்சார வாகனங்கள் முதல் சூரியமின் உற்பத்தி நிலையங்கள் வரை மற்றும் இன்னும் பல்வேறு விஷயங்களில் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

உள் கட்டமைப்பு திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் உயர்வு

பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.