ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு தமிழகத்தில் பொதுவெளியில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால், காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்தக் கூட்டத்தின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தக் கூட்டத்துக்கு பாஸ் அல்லது க்யூ-ஆர் கோடு என எதுவும் கிடையாது என்றும், ஈரோடு மக்கள் அனைவரும் விஜய்யைக் காண வரலாம் என்றும் செங்கோட்டையன் அழைப்பு விடுத்தார்.