கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 3 வயது குழந்தை வீட்டை விட்டு வெளியே வேகமாக ஓடி சாலையை கடக்க முயன்றது.

மோட்டார் வாகனம்  வருவது தெரியாமல் ஓடிய  3 வயது குழந்தை மீது புல்லட் பைக்  இடித்துள்ளது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சத்திய நாராயணன் வேகமாக வராததால் குழந்தை லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து காந்திபுரம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.