பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அரசு, ‘பஞ்சாப் செல்வாக்கு செலுத்தும், அதிகாரமளிக்கும் கொள்கை, 2023’ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையானது சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி,  இந்தியா முழுவதும் உள்ள இணைய பயன்பாட்டாளர்களுக்கு, பஞ்சாபின் பலதரப்பட்ட கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆளுகை அம்சங்களின் விவரங்களை இந்திய மக்களிடையே எடுத்து செல்வதே இதன் நோக்கம்.

இந்த அறிவிப்பின் படி,  செல்வாக்கு செலுத்துபவர்களை அவர்கள் வைத்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐந்து குழுக்களாக வகைப்படுத்துகிறது அரசு. வெவ்வேறு வகைகளுக்கான அதிகபட்ச ஊக்க தொகைகள் இங்கே:

– வகை ‘A’ (ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள்): ஒரு பிரச்சாரத்திற்கு அதிகபட்ச ஊக்க தொகையாக ரூ 8 லட்சம்.

– பிரிவு ‘பி’ (ஐந்து லட்சம் முதல் ஒரு மில்லியன் சந்தாதாரர்கள் வரை): ஊக்க தொகை ரூ. 5 லட்சம்.

– பிரிவு ‘சி’ (ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் சந்தாதாரர்கள்): அதிகபட்ச ஊக்க தொகை ரூ. 3 லட்சம்.

– வகை ‘டி’ (50,000 முதல் ஒரு லட்சம் சந்தாதாரர்கள்): அதிகபட்ச ஊக்க தொகை ரூ. 3 லட்சம்.

– வகை ‘இ’ (10,000 முதல் 50,000 சந்தாதாரர்கள்): அதிகபட்ச ஊக்க தொகை ரூ 1 லட்சம்.

டிஜிட்டல் யுகத்தில் மக்களின் பொது உணர்வுகள் மற்றும் அவர்களது வாழ்க்கையை கதைகளாக  வடிவமைத்து  டிஜிட்டல் மீடியாவில் செல்வாக்கு செலுத்துபவர்களை  பயன்படுத்துவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்சாபின் முன்னேற்றம், கலாச்சாரம் மற்றும் மக்களின் அனுபவங்கள் பற்றிய கதைகள் இந்தியா முழுவதும் பகிரப்படுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு டிஜிட்டல் தளங்களில் இருந்து செல்வாக்கு செலுத்துபவர்களை இந்த முயற்சியில் பங்கேற்க பஞ்சாப் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த செயல்பாடு  நேர்மறையான வெளிப்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், போலி மற்றும் கையாளப்பட்ட செய்திகளை எதிர்ப்பதிலும்  பங்களிக்கிறது.

அரசின் இந்த செயல்பாட்டில் பங்கேற்க, விரும்பும் நபர்கள்  பரவலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் தகவல் பரவலை உறுதிசெய்ய, முக்கிய சமூக வலை  தளங்களில் வலுவான மற்றும் பிரபலமானவராக இருக்க வேண்டும். எந்தவொரு குற்றவியல் பதிவுகளோ அல்லது மாநில மற்றும் தேசத்தின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், நேர்மறை மற்றும் சட்டபூர்வமான கருத்துக்களை வெளியிடுபவர்களாக இருத்தல் அவசியம்.