சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. ராஜ கம்பீரம் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களில் கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே இருப்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது.

எனவே சுகாதாரத்துறை மூலம் கொசு மருந்து அடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய பெரும்பாலானோர் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இறுதியாக பேசிய ஒன்றிய ஆணையர் லூயிஸ் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும், கொசு மருந்து அடிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படும். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நேரடியாக செயல்படுத்தக்கூடிய பணிகள் செய்து தரப்படும் என கூறினார்.