இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்PAN கார்டை unblock செய்து தருகிறோம் என்று எஸ்பிஐ வங்கியில் இருந்து யாரும் ஃபோன் செய்ய மாட்டார்கள் என்று வங்கி எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கும் கடைசி தேதி இன்றோடு நிறைவடைகிறது. நாளை முதல் பான் கார்டு செயலிழக்கும் என்பதால் அதனை வைத்து மோசடி செய்ய பலர் தயாராக இருக்கின்றனர். எனவே அப்படியான அழைப்புகளை கவனமாக கையாளுங்கள் என்று SBI எச்சரித்துள்ளது.