பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மீனவர் இப்ராஹிம் ஹைடாரி என்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளார். அரேபிய கடலில் அவர் சமீபத்தில் மீன் பிடிக்க சென்ற போது அவருக்கு  அரிய தங்க மீன்கள் கிடைத்தன, “சோவா” என்று அழைக்கப்படும் அந்த மீன்கள் மருத்துவ குணம் மிக்க மீன் என்பதால்,

ரூ 7 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.  20-40 கிலோ எடையுள்ள இந்த மீன்கள், ஒவ்வொன்றும் தோராயமாக ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது. இப்ராஹிமின் எதிர்பாராத அதிஷ்டம்  மருத்துவ மதிப்புள்ள மீன்களின் தேவைக்கான மதிப்பை உணர்த்தியதோடு,  பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் பொதிந்துள்ள அடிக்கடி கவனிக்கப்படாத பொருளாதார வாய்ப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.