1. அவசரநிலை பிரகடனம்: ஐஸ்லாந்து தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்தது.
  2. இருப்பிடம் மற்றும் காரணம்:நில அதிர்வு செயல்பாடு கிரிண்டாவிக் வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரைச் சுற்றி குவிந்துள்ளது, இது எரிமலை வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கலாம்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு:பிராந்தியத்தில் நிலநடுக்கத்தின் தீவிர நடவடிக்கை காரணமாக தேசிய காவல்துறை தலைவர் சிவில் பாதுகாப்புக்காக அவசரகால நிலையை அறிவித்தார்.
  4. அளவு மற்றும் அதிர்வெண்: ஐஸ்லாந்த்  வானிலை அலுவலகம் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 24,000 அதிர்வுகளைப் பதிவுசெய்தது, ஒரே நாளில் சுமார் 800 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
  5. நில அடையாளங்கள் மீதான தாக்கம்: அதிகரித்த நில அதிர்வு செயல்பாடு காரணமாக, அருகிலுள்ள புளூ லகூன் மைல்கல் என்ற  பிரபலமான சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
  6. வெளியேறும் திட்டங்கள்: நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் 4,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட கிரின்டாவிக் கிராமம், ஒருவேளை எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் வெளியேறுவதற்கு தேவையான திட்டங்களை வகுத்துள்ளது.
  7. சாலை மூடல்கள்: க்ரிண்டாவிக் செல்லும் அனைத்து வழிகளும், அவசரத் தேவைகளைத் தவிர, சாத்தியமான வெளியேற்றத்தை எளிதாக்கும் வகையில் மூடப்பட்டுள்ளன.
  8. நிலநடுக்க மைய விவரங்கள்: இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், 5.2 ரிக்டர் அளவு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள், க்ரிண்டாவிக் வடக்கே ஏற்பட்டன, அது பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
  9. மாக்மா குவிப்பு: ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் சுமார் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலத்தடி மாக்மா (எரிமலை குழம்பு) திரட்சியைக் கண்டறிந்தது, இது எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்பு விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  10. ஐஸ்லாந்தில் எரிமலை ஆபத்து: கிட்டத்தட்ட 30  செயலில் உள்ள எரிமலை தளங்களுடன், ஐஸ்லாந்து உலகளவில் மிகவும் புவியியல் ரீதியாக செயல்படும் இடங்களில் ஒன்றாகும்.
  11. புவியியல் விளக்கம்: சுற்றியுள்ள பாறையை விட இலகுவான மாக்மா (நெருப்பு குழம்பு)பூமியின் மேற்பரப்பிற்கு ஆழமான பக்கத்திலிருந்து  உயரும் போது எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.