
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா பாகிஸ்தான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான ராணுவ இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதாவது இந்திய ராணுவ பொறியியல் சேவை மையத்தின் இணையதளம் மற்றும் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளங்களை பாகிஸ்தான் முடக்கியுள்ளது. இந்த சைபர் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் முடக்கப்பட்ட இணையதளங்களை மீட்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் சைபர் தாக்குதல் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.