
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் எம்பி ஓவைசி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பஹல்காம் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் தாக்குதல் நடத்தியவர்களை கிளர்ச்சியாளர்கள், துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த தாக்குதலின் போது மதத்தை கேட்ட பின்னரே பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இவ்வாறு மதத்தின் அடிப்படையில் கொலை செய்பவர்கள் பயங்கரவாதிகள் தானே…. வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடவில்லை? அவர்கள் நாட்டில் நடந்தால் அதை பயங்கரவாத தாக்குதல் என்று அழைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.