பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், நடன அசைவுகள் மற்றும் இனிய குரலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததோடு, பன்முகதிறமை கொண்டவராகவும் விளங்கினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தன் வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் மைக்கேல் ஜாக்சன்.

இதையடுத்து இவரது வாழ்க்கையை படமாக்க ஒரு வருடமாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாபர் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் கிரஹாம் கிங் தெரிவித்துள்ளார்.