மதுரை மாவட்டம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஒரு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து சாக்லேட் பானிபூரி மற்றும் மில்க் ஷேக் பானிபூரிகளை விற்பனை செய்து வருகின்றார். ஐஸ்கிரீம்களிலுள்ள அனைத்து பிளேவர்கள் பானி பூரியும் இங்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம் மற்றும் பால்சர்பத் பானி பூரியானது ஸ்பெஷலாக இருக்கிறது.

அதாவது, பானிபூரிக்குள் சாக்லேட் பிஸ்கட்டையும், ஐஸ்கிரீம்களையும் போட்டு அவற்றில் மேல் சாக்லேட் கிரீமை ஊற்றி தருகின்றனர். அதோடு இவர்கள் ஸ்பெஷல் ஆக செய்த பால் சர்பத்தை பானிபூரிகளில் ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். இது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.