அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அடிக்கடிப் பெண்கள் குறித்துப் பேசிச் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இம்முறை, தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் (Press Secretary) கரோலின் லீவிட் (Karoline Leavitt) குறித்து அவர் பேசிய கருத்துகள் புதியச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

பென்சில்வேனியாவில் நடந்தப் பேரணி ஒன்றில் ட்ரம்ப், தனது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்துப் பேசினார். அப்போது கரோலின் லீவிட்டை மேடைக்கு அழைத்துப் பேசுகையில், “இன்று நாம் நமது சூப்பர் ஸ்டார் கரோலினையும் அழைத்து வந்துள்ளோம்.

அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திரத் துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் (Gun-like lips) உள்ளார்” என்றுப் பேசினார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்து, அவரது ஊழியர் குறித்துப் பாலியல் ரீதியானத் தொனியுடன் பேசியதாகக் கூறி, இணையத்தில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.