அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசையமைப்பாளர் பர்ட் பச்சராக் (94). இவர் வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பர்ட்‌ பச்சார்க் பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பியானோ கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தொடர்ந்து 5 தசாப்தங்களாக அமெரிக்க பாப் இசையில் புகழ்பெற்று விளங்கியவர். மேலும் 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான பாப் இசை அமைப்பாளர்களில் பர்ட் பச்சராக் ஒருவர். இவர் உயரிய விருதான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.