தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளின் ஒருவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகன் நடிகை நயன்தாராவை ஒரு முறை விமர்சித்து பேசி இருந்தார். அதாவது சாகும் தருவாயில் மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில் கூட முழு மேக்கப்புடன் நயன்தாரா இருந்தார் என்று மாளவிகா மோகன் விமர்சித்திருந்தார். இதற்கு நயன்தாராவும் பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு நயன்தாராவும் பதிலடி கொடுத்திருந்தார். அந்த சீனில் இயக்குனர் சோகமாக இருக்கக் கூடாது என கூறினார்.

அதோடு கமர்சியல் படங்கள் அப்படித்தான் இருக்கும் என்று நயன்தாரா பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகை நயன்தாராவை மாளவிகா மோகன் மீண்டும் விமர்சித்துள்ளார். அதாவது நடிகை மாளவிகா பேட்டி ஒன்றில் நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். தீபிகா படுகோன் ஒரு சூப்பர் ஸ்டார். ஆலியா பட் ஒரு சூப்பர் ஸ்டார் என சொல்லுங்கள் என கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் நயன்தாரா மீது உங்களுக்கு இருக்கும் பொறாமை இன்னும் குறையவில்லையா என நெட்டிசன்கள் பலரும் நடிகை மாளவிகாவை வறுத்தெடுக்கிறார்கள்.