திருவொற்றியூரில் வசந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடை இழப்புக்கு பயன்படுத்தக்கூடிய மூலிகை பொடியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவர் 5600-ரூபாயை கொடுத்த ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பார்சலை பார்த்தபோது, இரண்டு கிலோ அரிசி மாவை அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வசந்தராஜன் 2வது முறையும் ஆர்டர் செய்துள்ளார்.

இரண்டாவது பார்சலை பெறும்போது டெலிவரி ஏஜென்ட் இருக்கும்போதே அந்த பார்சலை திறந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி அந்த பார்சலை திறந்து பார்க்கும்போது, அதில் கோதுமை மாவு இருந்துள்ளது. இதனால் அவர் டெலிவரி ஏஜெண்டுக்கு பணம் கொடுக்க மறுத்தார். இதுகுறித்து வசந்த ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.