ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்த அனைத்து ஆவணங்களையும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இபிஎஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அதிகமாக உள்ளதால் தான், ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.