பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மார்ச் 17ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் வாதத்தை கேட்காமல் பொதுக்குழு நீதிமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றோர்களை கட்சியிலிருந்து நீக்கியது போன்ற தீர்மானங்களை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை இருக்கிறது. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூற எந்த அதிகாரமும் இல்லை அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது.

அதனால் எதிர்க்கட்சியிடம் விளக்கம் கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்  எதிர்மனுதாரிடம் இதற்கு விளக்கம் கேட்காமல் எப்படி உத்தரவு போட முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக அதிமுக பொது குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அதிமுக பொது குழு செல்லும் என தீர்ப்பளித்தது.