
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அந்த கடத்தலுக்கு பின் இந்திய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட இவர் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு ஜெய்ஷ் இ முகமது என்று பயங்கரவாத அமைப்பினை தொடங்கிய இவர் 2001ல் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் நடத்தினார்.
இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு புல்வாமா குண்டு வெடிப்பு தாக்குதலில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான இவருக்கு பஹவல்பூரில் 2 வீடுகள் உள்ளது. ஒன்று உஸ்மான் ஓ அலி மசூதிக்கு அருகில் அமைந்துள்ளது. 2 வது வீடு ஜாமியா மசூதி க்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் பல வழக்குகளில் முக்கியக் குற்றவாளியான இவர் இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பஹவல்பூரை குறிவைத்து தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.