ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதி முகாம்கள் குறிவைக்கப்பட்ட நிலையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. முப்படைகள் இணைந்து கூட்டாக நடத்திய இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறி வைக்கப்படவில்லை என்றும், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய ராணுவம் நடத்திய “ஆப்ரேஷன் சிந்துர்” தாக்குதலின் போது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.