மதுரையில் இருந்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை கடந்து சென்றபோது பின்னால் வேகமாக 30 பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்து வேன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வேனில் பயணம் செய்த கலைச்செல்வி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.