மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 93,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநிலத்தில் பெண்கள் காணாமல் போவது குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு: 45,000 பெண்கள். 2025 ஆம் ஆண்டு 48,000 பெண்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 93,000 பெண்கள் மாயமாகியுள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி 2024-ம் ஆண்டில்: 36,581 பெண்கள் மீட்கப்பட்டனர். 30,877 பெண்கள் மீட்கப்பட்டனர்.
காணாமல் போனவர்களில் சிறுமிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல்: 11,313 சிறுமிகள். 12,113 சிறுமிகள். சிறுமி கடத்தல் மற்றும் காணாமல் போவதைத் தடுக்க அரசு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மகாராஷ்டிராவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த இந்தத் தரவுகள் அம்மாநில அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
