ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்த ஒரு ஷோவாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி. தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது .ஹிந்தியில் பிக் பாஸ் இதுவரை 16 சீசன்களை கடந்து தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே இந்த போட்டியில் தன்னுடைய மாதவிடாய் காலத்தை தவறவிட்டதாகவும் கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த தகவல் பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.