விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர்தான் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சக போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டினால் ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கெட்ட வார்த்தை பேசுகிறார் என்ற குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இவர் அவ்வப்போது தன்னுடைய twitter பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார் .

தற்போது முக்கியமான பதிவு ஒன்றை போட்டுள்ளா.ர் அதில், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு யாரும் பிரெண்ட் ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டாம். என்னுடைய சந்தோஷமான தருணங்களை என்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கும் தனிப்பட்ட இடம் என்றும், ஆனால் உங்களை நான் தோழமையுடன் கருதவில்லை என்று நினைக்க வேண்டாம். புது நண்பர்களை நம்பி தன்னுடைய வாழ்க்கைக்கு நுழையும் நிலையில் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.

இதை நான் தனிப்பட்ட முறையில் தாங்கி கொள்வேன். ஆனால் அது என்னது குடும்பம் மற்றும் நண்பர்களை பாதிக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வேன் என்றும் தன்னை தவறாக சித்தரித்து என்னுடைய பெயரை வைத்து  ‘Crowd Fundung ஈடுபட நேர்ந்ததால் இதனை நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம் என்னுடைய கலையை  நிரூபிக்க பிறரிடம் பணம் வாங்கும் குணம் எனக்கு கிடையாது. நான் ஏழைதான் ஆனால் எனக்கு என்று சில முக்கியமான கோட்பாடுகள் வைத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன் என்று கூறியுள்ளார்.