மத்திய பிரதேச மாநிலத்தில் பிரக்லாத் சிங் கோஷி என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்ற போது எதிர்பாராத விதமாக ஒரு நாய் மீது அவருடைய கார் மோதியது. இதை பார்த்த அந்த நாய் சிறிது தூரம் அவரை துரத்திய நிலையில் பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் திருமண விழாவிற்கு சென்று விட்டு நள்ளிரவு அவர் வீட்டிற்கு திரும்பினார்.

பின்னர் மறுநாள் காலை அவர் தன்னுடைய காரை பார்த்தபோது அதில் ஏராளமான கீறல்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் மீது மோதிய நாய் மற்றொரு நாயுடன் வந்து நள்ளிரவு நேரத்தில் அந்த காரில் நகங்களால் கீறியது தெரிய வந்தது. இந்த சோகத்தை சரி செய்வதற்கு அவர் 15000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.