
தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தினந்தோறும் எதாவது ஒரு இடத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. அதில் 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தை மாமா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமியை சகோதரன், தந்தை மாமா என மூன்று பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.