கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இரண்டு கைகளையும் இழந்த நிலையில் நம்பிக்கையை விடாமல் சாதித்த மாணவர் குறித்த செய்தியானது முதலமைச்சர் கவனத்திற்கு சென்ற நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அந்த மாணவனுக்கு உடனடியாக உதவியுள்ளார்.

அதாவது மாணவர் க்ருத்தி வர்மாவின் தாயாரிடம் முதல்வர் பேசி அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகதெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் கிருத்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்த விளங்க வேண்டும் எனவும் அதற்கு அரசு துணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.