தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். அதன்பின் வீடு புரோக்கர் சஞ்சய் என்பவர் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து ஹடாப்சர் பகுதியில் காலியாக கிடந்த வீட்டை பெண்ணுக்கு காட்டி இருக்கிறார். இந்த நிலையில் புரோக்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அந்த பெண் சமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவான புரோக்கர் சஞ்சயை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.