ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக வரக்கூடாது என உரிமையாளர் அடிக்கடி பப்லுவிடம் சொல்லி வந்துள்ளார்.

எனினும் பப்லு தொடர்ந்து வீட்டிற்கு தாமதமாகவே வந்து உள்ளார். அதன்பின் இரவில் எழுந்து கதவை திறப்பது கடினமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டிற்கு தாமதமாக வந்தால் கதவு திறக்கப்படாது என அவரிடம் ராணுவ வீரர் கூறியுள்ளார். அதற்கு பப்லு வேறு சாவியை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதில் ராணுவ வீரர், உரிமம் பெற்ற துப்பாக்கியால் பப்லுவை நோக்கி சுட்டு உள்ளார். இதனால் துப்பாக்கி தோட்டா பப்லுவின் காலில் பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணுவ வீரரை கைது செய்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.