மத்திய பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் தர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனாவர் பகுதியில் இருந்து தனியார் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அப்போது திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்வர் சாலை மார்க்கமாக புரிந்து கொள்வதற்காக காரில் சென்றார்.