சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் என்று கூறி பிரதிக்ஷா அந்த சிறுமியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அப்போது சென்ற சிறுமியை வரவேற்ற பிரதிக்ஷா அவருக்கு இனிப்பு கொடுத்துள்ளார். அந்த இனிப்பை சாப்பிட்டதும் சிறுமியும் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து பிரதிக்ஷா தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய நண்பர்களை வரவழைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவியுள்ளார். பின்னர் இது பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள்.  அதன் பிறகு சிறுமி வீடு திரும்பியதும் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே பெற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பிரதிக்ஷாவையும் அவருடைய காதலனையும் கைது செய்துள்ளனர்.