
தர்மபுரி நோக்கி அரசு டவுன் பேருந்து பொம்மிடியிலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிக்கெட் வாங்காமல் பணியிலிருந்த கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டன் முருகேசனை சரமாரியாக தாக்கினார். இதனால் காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.