ஒலிம்பிக் போட்டி என்பது 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியாகும். இதில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியே உலகில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளது. இதற்கு அடுத்து 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.
இது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. 2032 ஆம் ஆண்டு அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் பிரிஸ் பேன் நகரில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2036 காண ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெற வேண்டும் இது பல இந்தியர்களின் கனவாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
மேலும் 2036 இல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்திருந்தார். இதனைக் குறித்து அவர் கூறுகையில் சர்வதேச ஒலிம்பிக் நிறுவனத்திடம், இந்திய விளையாட்டு துறை நிறுவனம் முறைப்படி அனுமதி பெற விண்ணப்பம் கொடுத்துள்ளது. இதில் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கான இடம் மேலும் அதற்காக வசதிகள், எந்தெந்த மாதிரியான உதவிகள் செய்யும் என பல்வேறு தகவல்களை விண்ணப்பத்தில் கொடுத்துள்ளது எனவும் கூறினார்.