மும்பையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அஜாஸ் சுழல் பந்து வீச்சில் சிக்கிய இந்திய அணி முழுவதுமாக தோற்றது. இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி கூறியதாவது, டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் வீரர்கள் அல்ல, பயிற்சியாளரே ஆவார். இந்திய அணி தற்போதுள்ள நிலைமையில் ட்ராவிட்டை முக்கியமாக தேடுவர். அவர் ஒரு போட்டிக்கு தயாராவதற்கு நான்கு நாட்கள் திட்டமிடுவார். ஆனால் தற்போது உள்ள பயிற்சியாளர்கள் இரண்டு நாட்களே எடுத்துக் கொள்கின்றனர்.
T20 கிரிக்கெட் போல டெஸ்ட் தொடரில் விளையாண்டால் அது அணியின் வெற்றியை பாழாக்கிவிடும். அனைவருமே இங்கிலாந்தின் பேஸ் பால் முறையை பார்த்து முயற்சிக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ஒருமுறையாவது டெஸ்ட் தொடரில் வென்று உள்ளதா? என்பதை பார்ப்பதில்லை. மும்பையில் மைதானம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சிறந்த பேட்ஸ்மன்களுக்கும் விளையாட்டு குறித்த நம்பிக்கையை இழந்துவிட்டது. அடுத்து ஆஸ்திரேலியாவிற்கு விளையாட செல்ல உள்ளனர் அங்கு அவர்களது நம்பிக்கை முழுவதுமாக குறைந்து இருக்கும். இவ்வாறு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறினார்.