விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தோடு இருந்ததற்கு சான்றுகளாக பல தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வில் சற்று பெரிய அளவிலான பானை கிடைத்தது. அதே பகுதியில் சிறிய பானைகளும் உடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த அகழாய்வு நடைபெறும் இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்கு வளையல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி இருக்கலாம்.

அந்த ஆலையில் இருந்தவர்கள் குடிநீருக்காக பெரிய பானையை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பானை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல புதிதாக தோண்டப்பட்ட 15-ஆவது அகழாய்வு குழுவில் பச்சை, சிவப்பு, ஊதா உள்ளிட்ட நேரங்களில் கண்ணாடி பாசிமணிகள் ஏராளமாக கிடைத்தது. அதனை முக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் ஆபரணமாக உபயோகப்படுத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.