கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமன்(35) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராமன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற அரசு விரைவு பேருந்து ராமர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மேலும் மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்பு சுவரைத் தாண்டி எதிரே தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சாமிதுரை, அவரது மனைவி ஜெயலட்சுமி, கார் ஓட்டுநர் ராஜேஷ், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ராமர் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலஷ்மி பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.