ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்m