தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே முதியவர் தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, நான் சிட்லகாரம் பட்டியல் வசித்து வருகிறேன். எனது பெயர் முருகன். எங்கள் கிராமப் பகுதியில் 18 கிராம மக்கள் சேர்ந்து திருவிழா ஒன்றை நடத்தினர். அந்த திருவிழாவில் நடந்த அன்னதானத்தில் நான் உணவு வாங்கி சாப்பிட்டேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் என்னை தாக்கினார்.

மேலும் எனது வீட்டிற்கு வந்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நீ எப்படி அன்னதானத்தில் உணவு சாப்பிடலாம் எனக் கூறி என்னை மீண்டும் தாக்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் என்னை மீட்டு சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனவே என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.