ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த ஆன்லைன் சேவை ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என EPFO நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
EPFO-ன் ஆன்லைன் சேவைகள்
# EPFO உறுப்பினர் போர்டல் (அ) உமாங் ஆப் வாயிலாக ஓய்வூதிய கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பித்தல்
# ஓய்வூதிய பாஸ்புக்-ஐ ஆன்லைனில் பார்த்தல்.
# டிஜி-லாக்கரிலிருந்து ஓய்வூதிய கட்டண உத்தரவை (பிபிஓ) டவுன்லோடு செய்ய வேண்டும்.
# மொபைல் ஆப் வாயிலாக வீட்டில் இருந்து டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பித்தல்.
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு போன்றவை இந்தியாவில் உமாமங் செயலியை உருவாக்கி உள்ளது. உமாங் செயலி வாயிலாக இந்திய குடிமக்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை எந்த வித சிரமும், அலைச்சலும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.