ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கியதற்கு நினைவாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனால் ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் பலருக்கும் முழுமையாக தெரிந்து இருப்பது இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாடாக அமைந்ததை கொண்டாடும் நாள் தான் குடியரசு தினம். குடியரசு என்பதற்கு மக்களாட்சி என்று பொருள்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா முழுவதும் சுதந்திரத்திற்காக போராட்டங்கள் நடத்தி பாடுபட்டுக் கொண்டிருந்த பல இயக்கங்கள் காந்தியடிகளின் கீழ் ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் பூர்ணசுவராஜ் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூர்ண சுவராஜ் என்பதற்கு முழுமையான சுதந்திரம் என்பது அர்த்தம். அதனை நினைவு கூறும் வகையில் காந்தியடிகள் இனி ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு வரை ஜனவரி 26 ஆம் நாள்தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து முறையான சுதந்திரத்தை பெற்ற பிறகு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்தியாவிற்கான அரசியலமைப்பு உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த 80 நாட்களில் கடும் உழைப்பால் இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்கி அதே ஆண்டு நவம்பர் நான்காம் தேதி அம்பேத்கர் ஒப்படைத்தார். அந்த அரசியலமைப்பு பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அதிகாரப்பூர்வ சட்டமாக மாறும். நேரு தலைமையில் அமைந்த முதல் பாராளுமன்ற அமைச்சரவை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் விவாதம் நடத்தி பிறகு ஒரு வழியாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதன் பிறகு அப்போது இருந்த 308 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கையால் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் சட்ட வடிவை பெற்றது. இதனை மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்த நேரு அரசு, காந்தியடிகள் சுதந்திர தினமாக அறிவித்த ஜனவரி 26 ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த நாள் அதாவது குடியரசு தினமாக அறிவித்தது.

மேலும் குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு என்று சில வரைமுறைகளை விதித்தது. குடியரசு தினத்தன்று இந்திய பிரதமர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் நினைவிடத்திற்கு சென்று சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் ஏதாவது ஒரு சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்து அவரை குடியரசு தின விழாவில் பங்கு கொள்ள செய்ய வேண்டும்.

பிறகு சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு, அந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பாதுகாப்பு வீரர்களுக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் மாநிலங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் தலைமை செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றி, காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட வேண்டும். மேலும் அந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கொடி ஏற்றி இனிப்பு கொடுத்து கொண்டாட வேண்டும். 1950 ஆம் ஆண்டு நேரு பிறப்பித்த ஆணையில் மாநில ஆளுநர்கள் தான் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டது இருந்தது.

அதன் பிறகு தமிழக முதலமைச்சராக வந்த கலைஞர் கருணாநிதி அப்போது பிரதமராக இருந்த நேருவின் மகள் இந்திரா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் தான் இனி கொடியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்ற அனுமதி அளித்து ஆணையை பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் தற்போது முதலமைச்சர்கள் கொடி ஏற்றி வருகின்றார்கள். இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாக அமைந்ததை கொண்டாடும் நாள்தான் குடியரசு தினம். குடியரசு என்பதற்கு மக்களாட்சி என்பது தான் பொருள்.