கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிய அவ்வபோது ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் பணிகளில் ஈடுபடுபவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பைக் ஸ்டண்டுகள் நடைபெறுவதை கண்டறியும் விதமாக தொழில்நுட்பம் மிகுந்த சைபர் ரோந்து சேவைகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என கேரளா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.