கிசான் கிரெடிட்கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ம் வருடம் தேசிய வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சி வங்கியால் துவங்கப்பட்ட து. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப்பொறுப்பு குழுவின் உறுப்பினர் ஆகிய சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

KCC திட்டத்துக்கான தகுதி அளவுகோல்களில் உரிமையாளர்-பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகைதாரர் விவசாயி (அ) சுய உதவிக்குழு (அ) கூட்டுப் பொறுப்புக் குழுவில் உறுப்பினராக இருப்பது அவசியம் ஆகும். கிசான் கிரெடிட்கார்டை பயன்படுத்துவதன் நன்மைகளில் குறைந்த வட்டி விகிதங்கள், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பங்கள், காப்பீட்டுத் கவரேஜ், சேமிப்புக் கணக்கு, ஸ்மார்ட் கார்டு மற்றும் டெபிட்கார்டு மீதான கவர்ச்சிகரமான வட்டிவிகிதம் ஆகிய பிற நன்மைகள் அடங்கும்.