தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த சுஷ்மா (27) என்பவருக்கும், ஆடிட்டராகப் பணிபுரியும் அவரது கணவர் யஷ்வந்த் ரெட்டிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த சுஷ்மா, தனது 10 மாதக் குழந்தை யஷவர்தனுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அறைக்குள் சென்றவர், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை.
வேலை முடிந்து வந்த யஷ்வந்த் ரெட்டி, சந்தேகமடைந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, சுஷ்மாவும் குழந்தையும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தனது மகளும் பேரனும் சடலமாக இருப்பதைப் பார்த்த சுஷ்மாவின் தாய் லலிதாவும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
