
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத் தொடங்கியுள்ளது. உடனே அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை மேற்கொண்டனர்.
அதன் பின் அவரது தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை லாபகமாக அகற்றி அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். தற்போது கன்னியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் திறமையான சிகிச்சையால் தொழிலாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.