உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி ஒன்று தடுமாறி கால்வாயில் விழுந்தது.

அதனை கண்ட பிரஜேஷ் உடனடியாக கால்வாயில் குதித்து நாய்க்குட்டியை காப்பாற்றிய போது அந்த நாய்க்குட்டி அவரை கடித்துவிட்டது. ஆனால் அவர்  தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நாய் கடித்து பல நாட்களுக்கு  பின் அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாமல் இருந்ததால் ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட அவர் படுக்கையில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வழியில் துடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.